இதய நோய் குறித்த மரபணு ஆராய்ச்சிக்கு புதிய ஒப்பந்தம்
July 20 , 2017 3052 days 1517 0
இதய நோய் தொடர்பான மரபணு ஆய்வுகளை மேற்கொள்ளும் வகையிலான புதிய ஒப்பந்தத்தில் மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனை கையெழுத்திட்டுள்ளது.
மரபணு அடிப்படையிலான நோயறிதல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான . 'மெட்ஜீநோம் உடன் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி மாரடைப்பு, நுரையீரல் தமனியில் உயர் ரத்த அழுத்தம், இதய நோயினால் ஏற்படும் திடீர் மரணங்கள் உள்ளிட்டவை குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
மெட்ஜீனோம் நிறுவனம், கடந்த ஆண்டு இம்மருத்துவமனை வளாகத்தில் மரபணு ஆய்வகம் மற்றும் பரிசோதனை மையம் ஒன்றை நிறுவியது. அதன் தொடர்ச்சியாக இந்தப் புதிய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.