இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) இடஒதுக்கீடு
March 15 , 2021 1609 days 731 0
OBC வகுப்பினருக்கான இடஒதுக்கீடானது பட்டியல் இனத்தவர் (SC) மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினருக்கு (ST) என்று அரசியலமைப்பு மூலமாக வழங்கப் பட்ட இடஒதுக்கீட்டைப் போல் அல்லாமல், சட்டப்பூர்வமாக மட்டுமே இருக்கும் என்று இந்திய உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மேலும் இது தொடர்புடைய உள்ளாட்சி அமைப்புகளில் SC/ST/OBC பிரிவினரில் 50% இடங்கள் முழுவதையும் SC மற்றும் ST பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டால்/எடுத்துக் கொண்டால் OBC பிரிவினருக்கு மேலும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கேள்வி எதுவும் எழாது என்றும் கூறியுள்ளது.
OBC பிரிவினர்களுக்கான இடஒதுக்கீட்டு அளவானது குறிப்பிடப்பட்டுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டுமே அளிக்கப்பட வேண்டும்.
ஒரு மாநிலத்திற்குள், உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்டவர்களின் நிலை மற்றும் அவர்களின் தாக்கங்கள் குறித்து ஒரு விரிவான ஆய்வினை மேற்கொள்ளச் செய்வதற்காக ஒரு பிரத்தியேக ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும்.
ஒதுக்கப்பட்டுள்ள அந்த உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேவையான இடஒதுக்கீட்டு விகிதமானது அந்த ஆணையத்தின் பரிந்துரைகளின் படி குறிப்பிடப்படும்.