இதுவரை பதிவானதில் அதிக வெப்பமான கோடைக்காலம் – 2023
September 22 , 2023 682 days 432 0
2023 ஆம் ஆண்டு கோடைக்காலமானது வட அரைக்கோளத்தின் வரலாற்றில் இதுவரை பதிவு செய்யப்பட்ட மிகவும் வெப்பமான கோடையாகும்.
கடந்த மாதமானது, அறிவியலாளர்கள் இதுவரை நவீன கருவிகள் மூலம் பதிவு செய்த வெப்பமான ஆகஸ்ட் மாதமாகும்.
இது இரண்டாவது வெப்பமான மாதமாகவும் அளவிடப்பட்டது.
2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், கோடை மாத சராசரி வெப்பநிலையை விட வெப்ப நிலை 2.2 டிகிரி ஃபாரன்ஹீட் (1.2 டிகிரி செல்சியஸ்) உயர்ந்தது.
இது தொழில்துறை காலத்திற்கு முந்தைய காலத்தின் சராசரியை விட சுமார் 1.5 டிகிரி செல்சியஸ் (2.7 டிகிரி பாரன்ஹீட்) அதிகமாக இருந்தது.
2023 ஆம் ஆண்டின் ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான காலகட்டமானது வரலாற்றில் இன்று வரையில் பதிவு செய்யப்பட்ட உலகின் வெப்பமான மூன்று மாத காலப்பகுதியைக் குறிக்கிறது.
ஜூலை மாதத்தில் பதிவான சராசரி உலக வெப்பநிலையானது கடந்த நூற்றாண்டின் சராசரியை விட 2°F (1.1°C) அதிகமாக இருந்தது.