இந்தி மொழி தினம் - செப்டம்பர் 14
September 17 , 2022
1024 days
374
- இந்நாளில் இந்திய அரசியலமைப்புச் சபையானது இந்தி மொழியினை மத்திய அரசின் அலுவல் மொழியாக மாற்ற முடிவெடுத்தது.
- ஆங்கில மொழியானது 15 ஆண்டுகள் இணை மொழி அந்தஸ்தைக் கொண்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டது.
- இது முன்ஷி-அய்யங்கார் சூத்திரம் என்றுப் பிரபலமாக அழைக்கப்படும் ஒரு சமரசம் ஆகும்.
- இது வரைவுக் குழுவின் உறுப்பினர்களான K M முன்ஷி மற்றும் N கோபாலசுவாமி அய்யங்கார் ஆகியோரின் பெயரால் அழைக்கப்படுகிறது.
- இந்தி மொழியானது, மத்திய அரசின் இரண்டு அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்று ஆகும்.
- 8வது அட்டவணையில் உள்ள 22 மொழிகளில் இது இடம் பெற்றுள்ளது.
- 52.8 கோடி தனிநபர்கள் அல்லது 43.6% மக்கள் தங்கள் தாய்மொழியாக கருதும் வகையில் இந்தி மொழி மிகவும் பரவலாகப் பேசப்படுகிறது.
- அடுத்த இடத்தில், 9.7 கோடி (8%) மக்களுக்குத் தாய்மொழியாக உள்ள வகையில் அதிக பட்சமாகப் பேசப்படும் மொழி வங்காள மொழியாகும்.
- கிட்டத்தட்ட 13.9 கோடி மக்கள் (11%க்கும் அதிகமானோர்) இந்தி மொழியினைத் தங்களது இரண்டாவது மொழியாக அறிவித்துள்ளனர்.

Post Views:
374