TNPSC Thervupettagam

இந்திய அரசின் வாகனவியல் கொள்கைத் திட்டம் 2047

July 25 , 2025 14 hrs 0 min 26 0
  • கனரக தொழில்துறை அமைச்சகமானது 2047 ஆம் ஆண்டு வாகனவியல் கொள்கைத் திட்டத்தினை (AMP 2047) அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இது உலகளாவிய வாகன உற்பத்தி மற்றும் வர்த்தகத்தில் இந்தியாவை ஒரு முன்னணி நாடாக நிலைநிறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது 2030, 2037 மற்றும் 2047 ஆம் ஆண்டுகளுக்காக என்று சில மேம்பாட்டு இலக்குகளை நிர்ணயிக்கும்.
  • இந்த முன்னெடுப்பில் மின்சாரம், வணிகம், சாலைகள் மற்றும் சுற்றுச்சூழல் போன்ற அமைச்சகங்களுக்கிடையே ஒருங்கிணைப்பு அடங்கும்.
  • இது அசல் உபகரண உற்பத்தியாளர்கள் (OEM), வாகனக் கூறு உற்பத்தி நிறுவனங்கள், கொள்கை உருவாக்க அமைப்புகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள் மற்றும் பயனர்களை உள்ளடக்கிய ஒரு தொழில்துறை தலைமையிலான உத்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்