TNPSC Thervupettagam

இந்திய அரசியலமைப்பின் டோக்ரி மொழிப் பதிப்பு

April 15 , 2023 785 days 345 0
  • இந்திய அரசியலமைப்பின் டோக்ரி மொழியில் எழுதப்பட்ட முதல் பதிப்பை ஜம்மு பல்கலைக் கழகத்தில் மத்திய சட்ட அமைச்சர் வெளியிட்டார்.
  • இது மொழியியல் பன்முகத் தன்மையை ஊக்குவிப்பதற்கும், நாட்டின் கலாச்சாரப் பாரம்பரியத்தைப் பாதுகாக்கச் செய்வதற்குமான ஒரு குறிப்பிடத்தக்கப் படியாகும்.
  • டோக்ரி என்பது வட இந்திய மாநிலமான ஜம்மு மற்றும் காஷ்மீரில் பேசப்படும் ஒரு மொழியாகும்.
  • இது இந்தியாவில்  அங்கீகரிக்கப்பட்ட 22 அதிகாரப் பூர்வ மொழிகளில் ஒன்றாகும்.
  • 2003 ஆம் ஆண்டு 92வது திருத்தச் சட்டத்தின் மூலம் எட்டாவது அட்டவணையில் போடோ, டோக்ரி, மைதிலி மற்றும் சந்தாலி ஆகிய மொழிகள் சேர்க்கப் பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்