அரசியலமைப்பு தினம் / சம்விதான் திவாஸ் 1949 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதியன்று இந்திய அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப் பட்டதைக் குறிக்கும் வகையில் அனுசரிக்கப்படுகிறது.
அரசியலமைப்பு ஆனது 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதியன்று நடைமுறைக்கு வந்தது இதனால் இந்தியா ஓர் இறையாண்மை கொண்ட குடியரசாக மாறியது.
இந்திய அரசானது, 2015 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதியை அரசியலமைப்பு தினமாக அறிவித்தது.
அனைத்துக் குடிமக்களிடையேயும் அரசியலமைப்பு உரிமைகள், கடமைகள் மற்றும் ஜனநாயக விழுமியங்கள் பற்றிய விழிப்புணர்வை பரப்புவதே இந்த நாளின் நோக்கம் ஆகும்.
2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Hamara Samvidhan – Hamara Swabhiman” (“Our Constitution – Our Pride") என்பதாகும்.