இந்திய அளவிலான கைபேசி செயலியில் சிறப்பு மகளிர் பாதுகாப்பு அம்சம்
December 10 , 2018 2336 days 745 0
112 இந்தியா எனும் அவசரகால கைபேசி செயலியின் கீழ் இந்தியா முழுவதிற்குமான ஒரே எண்ணாக 112 என்ற எண்ணின் துவக்கத்தை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாகாலாந்தில் அறிவித்தார்.
அவசரகால தீர்வு உதவி அமைப்புடன் (Emergency Response Support System-ERSS) இணைக்கப்பட்டுள்ள இந்த 112 இந்தியா செயலியானது பெண்களுக்கான பிரத்தியேகமாக ‘கூச்சலிடும்’ அம்சத்துடன் கிடைக்க வழிவகை செய்யப் பட்டிருக்கின்றது.
இந்த ERSS ஆனது அவசரகால எண்ணான 112 வழியாக அவசர கால சேவைகளை வழங்குவதற்காக காவல்துறை, தீயணைப்புத் துறை, மருத்துவம் மற்றும் பெண்களுக்கான உதவி எண் ஆகியவற்றுடன் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது.
இதனால் நாகாலாந்தானது இமாச்சலப் பிரதேசத்தை அடுத்து இந்திய அளவிலான ஒரே எண் கொண்ட அவசரகால கைபேசி செயலியை தொடங்கிய இரண்டாவது மாநிலமாகவும் முதல் வடகிழக்கு மாநிலமாகவும் உருவெடுத்துள்ளது.