இந்திய ஆற்றல் மாதிரி மன்றத்திற்கான முதலாவது பணிமனை
March 16 , 2019 2314 days 732 0
நிதி ஆயோக்கும் சர்வதேச வளர்ச்சிக்கான ஐக்கிய அமெரிக்க நாடுகள் நிறுவனமும் இணைந்து இந்திய ஆற்றல் மாதிரி மன்றத்திற்கான (India Energy Modelling Forum - IEMF) முதலாவது பணிமனை நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துள்ளன.
இந்த மன்றமானது முக்கியமான ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் விவகாரங்களை ஆய்வு செய்திட முன்னணி நிபுணர்களுக்கும் கொள்கை வடிவமைப்பாளர்களுக்கும் ஒரு நடைமுறையை ஏற்படுத்திட உதவுகின்றது. மேலும் தகவலளிக்கப்பட்ட முடிவு எடுக்கும் விவகாரத்தில் ஆராய்ச்சி முறையையும் மாதிரியாக்கலையும் ஏற்படுத்திடவும் உதவுகின்றது.
ஆற்றல் மாதிரியாக்கல் முறைகள் ஒரு நாட்டிற்கு சிறந்த ஆற்றல் சேமிப்பு வாய்ப்புகள், சிறந்த கட்டண சேமிப்பு வாய்ப்புகள், சிறப்பு கார்பன் குறைப்பு வாய்ப்புகள் ஆகியவற்றை நிர்ணயித்திட பயன்படக்கூடும்.
ஆற்றல் மாதிரியாக்கல் முறைகள் கட்டிடங்களில் ஒட்டுமொத்த ஆற்றல் உபயோகத்தை குறைக்க உதவிடும். மேலும் குறிப்பிட்ட ஆற்றல் சேமிப்பு உபகரணங்கள் மறறும் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றின் உபயோகத்திற்கு சரியான வழியைக் காட்டிட நமக்கு உதவிடும்.
பெருமட்ட அளவில் ஆற்றல் மாதிரியாக்கல் முறைகள் மரபுசார் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்கள் ஆகிய மின் திட்டங்கள் இரண்டிற்குமான திட்டங்களை வகுத்து உருவாக்கிட அரசிற்கு உதவுகின்றது.