இந்திய ஆற்றல் மாதிரி மன்றம்
October 18 , 2020
1752 days
644
- நிதி ஆயோக்கானது இந்திய ஆற்றல் மாதிரி மன்றத்தின் (IEMF - India Energy Modelling Forum) நிர்வாக அமைப்பை அறிவித்துள்ளது.
- IEMF-ன் நிர்வாக அமைப்பானது ஒரு அமைச்சகங்களுக்கிடையேயான குழு மற்றும் ஒரு வழிகாட்டுக் குழுவைக் கொண்டிருக்கும்.
- அமைச்சகங்களுக்கிடையேயான குழுவானது மாதிரிச் செயல்பாடுகளை ஆய்வு செய்யும் மற்றும் புதிய ஆராய்ச்சிப் பகுதிகள் குறித்து வழிகாட்டுதல்களை அளிக்கும்.
- வழிகாட்டும் குழுவானது கொள்கை சார் விவகாரங்களைத் தேர்ந்தெடுக்கும்.
- மகாராஷ்டிராவின் பிரயாஸ் குழுவானது வழிகாட்டுக் குழுவின் முதலாவது நடத்துநராக (ஒருங்கிணைப்பாளராக) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
- இது அமெரிக்கா-இந்தியா உத்திசார் ஆற்றல் பங்களிப்பின் கீழ் நிதி ஆயோக் மற்றும் சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க நிறுவனம் ஆகியவற்றால் கூட்டாக தொடங்கப் பட்டுள்ளது.
- இந்த மன்றமானது அறிவுசார் பங்காளர்கள், தரவு நிறுவனங்கள் மற்றும் தொடர்புடைய அரசு அமைச்சகங்கள் ஆகியவற்றை உள்ளடக்கும்.
Post Views:
644