இந்திய இணையவழிக் குற்றங்கள் ஒருங்கிணைப்பு மையம் (I4C)
January 13 , 2020 2030 days 732 0
மத்திய உள்துறை அமைச்சகமானது இந்திய இணையவழிக் குற்றங்கள் ஒருங்கிணைப்பு மையம் (Indian Cyber Crime Coordination Centre - I4C) மற்றும் தேசிய இணையவழிக் குற்றங்கள் என்ற இணைய தளம் ஆகியவற்றினைத் தொடங்கி வைத்துள்ளது.
இந்த I4C மையமானது புது தில்லியில் அமைந்துள்ளது.
இது மத்திய உள்துறை அமைச்சகத்தினால் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இணையம் மற்றும் தகவல் பாதுகாப்புப் பிரிவின் கீழ் அமைக்கப்பட உள்ளது.
தேசிய இணையவழிக் குற்றங்கள் அறிக்கையிடல் வலைதளமானது இணையவழிக் குற்றங்கள் தொடர்பாக குடிமக்கள் நிகழ்நேரத்தில் அல்லது ஆன்லைனில் புகாரளிக்க உதவுகின்றது.
மத்திய அரசானது I4C மட்டுமல்லாது தேசியத் தகவல் மையம் – கணினி சார்ந்த அவசரக் கால பதிலெதிர்ப்புக் குழு (National Informatics Centre-Computer Emergency Response Team - NIC-CERT) ஆகியவற்றையும் தொடங்கியுள்ளது.