2025 ஆம் ஆண்டு பருவமழை ஜம்மு மற்றும் காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப் மற்றும் உத்தரக்காண்ட் ஆகியவற்றை கடுமையாக பாதித்தது.
இந்திய இமயமலைப் பகுதி, செயலில் உள்ள கண்டத் தட்டுகள், நில அதிர்வு மற்றும் பிளவுப் படக் கூடிய புவியியல் அமைப்பு காரணமாக மிகவும் பாதிக்கப்படக் கூடியதாக உள்ளது.
பருவநிலை மாறுபாடு ஆனது 2013 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளில் உத்தரக்கண்டில் ஏற்பட்டது போல அடிக்கடி மேக வெடிப்புகள், திடீர் வெள்ளம் மற்றும் பனிச் சரிவுகளுக்கு வழி வகுத்தது.
சாலைக் கட்டுமானம், நீர் மின் நிலையத் திட்டங்கள் மற்றும் நிலப் பயன்பாட்டு மாற்றம் போன்ற மனிதனால் தூண்டப்பட்ட காரணிகள் நிலச் சாய்வின் உறுதியற்றத் தன்மை மற்றும் அரிப்பை மோசமாக்குகின்றன.