இந்திய இராணுவத்தின் அடுத்த தலைமுறை நுட்பத்திலான பரிணாமம்
October 28 , 2025 3 days 24 0
இந்திய இராணுவம் ஆனது 2023 முதல் 2032 ஆம் ஆண்டு வரை ஒரு தசாப்த கால மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது.
புதிய அமைப்புகளில் ருத்ரா படைப்பிரிவுகள், பைரவ் படைப்பிரிவுகள், திவ்யஸ்திர பீரங்கி படைப்பிரிவுகள் மற்றும் சக்திபான் பிரிவுகள் அடங்கும்.
ருத்ரா படைப்பிரிவுகள் காலாட்படை, பீரங்கி மற்றும் கவசப் பிரிவுகளை இணைத்து அனைத்துப் பகுதிகளிலும் நிலைநிறுத்துவதற்கு ஏதுவான அனைத்து ஆயுத அமைப்புகளாகும்.
பைரவ் படைப்பிரிவுகள் என்பது விரைவான தாக்குதல்கள் மற்றும் தந்திரோபாய நடவடிக்கைகளில் கவனம் செலுத்துகின்ற, உயரடுக்குப் படைகள் மற்றும் வழக்கமான காலாட்படைகள் இணைக்கப்பட்ட சிறப்புப் பிரிவுகளாகும்.
துல்லியமான தாக்குதல்களுக்காக பீரங்கி படைப்பிரிவுகள் ஆனது, வழக்கமான பீரங்கிகளை ஆளில்லா விமானங்கள் மற்றும் இலக்கினைக் குறி வைத்து தாக்கும் வெடிமருந்துகளைக் கொண்டதாக மாற்றுகின்றன.
சக்திபான் பிரிவுகள் இலக்கு வைக்கப் பட்ட நடவடிக்கைகளுக்கு ஆளில்லா விமானங்கள் மற்றும் இலக்கினைக் குறி வைத்து தாக்கும் வெடிமருந்துகளுடன் மட்டுமே செயல்படுகின்றன.