2047 ஆம் ஆண்டிற்குள் இந்திய இராணுவத்தை முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட, எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் படையாக மாற்றுவதற்கான மூன்று கட்ட செயல் திட்டத்தை இராணுவப் படைகளின் தலைமைத் தளபதி அறிவித்தார்.
முதல் கட்டமானது (2032 ஆம் ஆண்டு வரை) திறன் மேம்பாடு, படைகளின் கட்டமைப்பு மற்றும் செயல்பாட்டுத் தயார்நிலை ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது; இரண்டாம் கட்டம் (2037 ஆம் ஆண்டு வரை) ஆதாயங்களை ஒருங்கிணைக்கிறது; மூன்றாம் கட்டம் (2047 ஆம் ஆண்டு வரை) அடுத்தத் தலைமுறை நுட்பத்திலான போர் தயார்நிலையை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தன்னிறைவு (ஆத்ம நிர்பாரதம்), புதுமை (அனுசந்தன்), தகவமைப்பு (அனுகுலன்) மற்றும் ஒருங்கிணைப்பு (ஏகிகரன்) ஆகிய நான்கு முக்கிய தூண்கள் மாற்றத்தினை நோக்கி வழிநடத்துகின்றன.
இந்தியாவின் இராணுவச் சீர்திருத்தங்கள் விக்ஸித் பாரதத்திற்கான தேசியத் தொலை நோக்கு கொள்கை மற்றும் மரியாதை, பேச்சுவார்த்தை, ஒத்துழைப்பு, செழிப்பு மற்றும் பாதுகாப்பு ஆகிய பிரதமரின் 5S கட்டமைப்போடு ஒத்துப் போகின்றன.