TNPSC Thervupettagam

இந்திய இராணுவத்தின் பணியாளர் கல்லூரி - பெண் அதிகாரி

November 22 , 2022 965 days 461 0
  • இந்திய இராணுவ வரலாற்றில் முதல் முறையாக, 6 பெண் அதிகாரிகள் புகழ்பெற்றப் பாதுகாப்புப் பணிகள் பணியாளர் கல்லூரியில் (DSSC) இணைய உள்ளனர்.
  • இது 2021 ஆம் ஆண்டில் இந்திய இராணுவமானது, பெண் அதிகாரிகளுக்கு நிரந்தரப் பணி வாய்ப்பு வழங்கியதையடுத்து இந்த நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டது.
  • இந்திய இராணுவத்தில் உள்ள மற்ற பாடத் திட்டங்கள்- தேசிய பாதுகாப்பு கல்லூரி, உயர்நிலைப் படைப்பிரிவு மற்றும் உயர் பாதுகாப்பு மேலாண்மை - அனைத்தும் பரிந்துரைக்கப் படுகின்ற நிலைகளாகும்.
  • பாதுகாப்புப் பணிகள் பணியாளர் கல்லூரிக்கான (DSSC) தேர்வு முறையானது ஒரு போட்டித் தேர்வின் அடிப்படையிலானதாகும்.
  • பாதுகாப்புப் பணிகள் பணியாளர் கல்லூரிப் படிப்பு என்பது இந்திய ராணுவத்தினால் நடத்தப்படும் ஒரே கல்லூரியாகும்.
  • 1905 ஆம் ஆண்டில் நாசிக் அருகே பாதுகாப்புப் பணிகள் பணியாளர் கல்லூரி நிறுவப் பட்டது.
  • 1907 ஆம் ஆண்டில், அது குவெட்டாவில் (இப்போது பாகிஸ்தான்) அமைந்துள்ள அதன் நிரந்தர இடத்திற்கு மாற்றப்பட்டது.
  • 1947 ஆம் ஆண்டில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு, இது தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் இராணுவக் குடியிருப்புப் பகுதிக்கு மாற்றப் பட்டது.
  • இது சென்னை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுச் செயல்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்