லூசியானா இறால் மற்றும் கெளுத்தி மீன் தொழில் துறைகளைப் பாதுகாப்பதற்காக அமெரிக்க மேலவை உறுப்பினர்கள் இந்திய இறால் வரிச் சட்டத்தினை அறிமுகப் படுத்தியுள்ளனர்.
உள்நாட்டு வணிகங்களுக்குப் பாதகம் விளைவிக்கும் வகையில், குறைந்தபட்ச ஒழுங்குமுறைகளுடன் இந்திய இறால் ஆனது அமெரிக்கச் சந்தையில் "அதிக அளவில் திணிக்கப் படுகிறது" என்று இந்த மசோதா குற்றம் சாட்டுகிறது.
அமெரிக்காவிற்கான இறால் ஏற்றுமதியில் இந்தியா மிகப்பெரிய பங்கைக் கொண்டு உள்ளது என்ற நிலையில் அதைத் தொடர்ந்து ஈக்வடார் இடம் பெற்றுள்ளது.
2023–24 ஆம் ஆண்டில், இந்தியா 7.16 லட்சம் மெட்ரிக் டன் அளவிலான பதப்படுத்தப்பட்ட இறால்களை ஏற்றுமதி செய்து, 4.88 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டியது.
இந்தியாவின் மொத்தக் கடல் சார் உணவு ஏற்றுமதி வருவாயில் இறால் மூலமான வருவாய் ஆனது டாலர் அடிப்படையில் 66.12 சதவீதப் பங்கினைக் கொண்டுள்ளது.
இந்திய ஏற்றுமதியாளர்கள் ஏற்கனவே 50 சதவீத அளவிலான அனைத்துப் பொருட்களுக்கான இறக்குமதி வரி, 5.77 சதவீதப் பதிலீட்டு வரி மற்றும் 2.65 சதவீத இறக்குமதிக் குவிப்புத் தடுப்பு வரியை செலுத்தி வருகின்றனர்.