இந்திய இளையோர் குத்துச் சண்டை வீரர்கள் – ஜெர்மனியில் ஆறு தங்கப்பதக்கங்கள்
December 19 , 2017 2758 days 988 0
இந்திய இளையோர் குத்துச் சண்டை வீரர்கள் ஜெர்மன் நகரமான சீவரின் என்ற நகரத்தில் நடைபெற்ற ஐந்தாவது சர்வதேச ஸ்வென் லாஞ் நினைவுப் போட்டியில் ஆறு தங்கம், நான்கு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கங்களை வென்று ஒட்டு மொத்த சாம்பியன்களாக போட்டியை நிறைவு செய்துள்ளனர்.
52 கிலோ எடைப்பிரிவில் பாவேஷ் கட்டமனி தனது தங்கப்பதக்கத்தை சிறந்த குத்துச்சண்டை வீரருக்கான கோப்பையோடு சேர்த்து வென்றார்.
இந்திய குத்துச்சண்டை வீரர்களின் இத்திறமை போட்டியின் சிறந்த அணி என்ற விருதையும் பெற்றுத் தந்தது.