இந்திய உடல் உறுப்பு தான விழிப்புணர்வு தினம் 2026 – ஆகஸ்ட் 03
August 6 , 2026 6 days 95 0
உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், மக்கள் தங்கள் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வருவதை ஊக்குவிப்பதையும் இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
1994 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3 அன்று புது தில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (AIIMS) உயிரிழந்த கொடையாளரிடம் இருந்து பெறப்பட்ட இதயத்தை வெற்றிகரமாக மாற்று அறுவை சிகிச்சை செய்த முதல் நிகழ்வை இந்த நாள் நினைவுகூருகிறது.
உடல் உறுப்பு தானம் என்பது உயிரைக் காப்பாற்ற அல்லது மேம்படுத்த ஆரோக்கியமான உறுப்புகளை (சிறுநீரகங்கள், கல்லீரல், இதயம், நுரையீரல், கணையம் மற்றும் குடல்) அல்லது திசுக்களை (கருவிழி, தோல், எலும்பு மற்றும் இதய வால்வுகள்) தானம் செய்வதை உள்ளடக்கியதாகும்.
இந்தியாவில் உடல் உறுப்பு தானமானது மனித உறுப்புகள் மற்றும் திசுக்கள் மாற்று சட்டம் (THOTA) மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது மற்றும் கடுமையான மருத்துவ மற்றும் சட்ட நடைமுறைகளைப் பின்பற்றுகிறது.
சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் (MoHFW) கூற்றுப்படி, வளர்ந்து வரும் பொது விழிப்புணர்வை பிரதிபலிக்கும் வகையில், 2026 ஆம் ஆண்டில் 5 லட்சத்திற்கும் அதிகமான உடல் உறுப்பு தான உறுதிமொழிகளை இந்தியா பதிவு செய்துள்ளது.