TNPSC Thervupettagam

இந்திய உயிரி-பொருளாதார அறிக்கை 2026

March 22 , 2026 15 hrs 0 min 37 0
  • உயிரி தொழில்நுட்பத் தொழில் ஆராய்ச்சி உதவி சபையானது (BIRAC) 'இந்திய உயிரி-பொருளாதார அறிக்கை (IBER) 2026'-ஐ புது தில்லியில் வெளியிட்டது.
  • இந்தியாவின் உயிரி-பொருளாதாரம் 2025 ஆம் ஆண்டில் 195.3 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது என்ற நிலையில் இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் 4.8–5% பங்களிக்கிறது.
  • இத்துறை 18% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது என்பதோடு சமீபத்திய ஆண்டுகளில் இது வலுவான விரிவாக்கத்தைக் காட்டுகிறது.
  • இதில் உயிரி-தொழில்துறைப் பிரிவு மிகப்பெரிய பங்கைக் கொண்டுள்ளது, அதைத் தொடர்ந்து உயிரி-மருந்து, உயிரி-சேவைகள் மற்றும் உயிரி-விவசாயம் ஆகிய சில துறைகள் உள்ளன.
  • இந்தியாவில் 11,800-க்கும் மேற்பட்ட உயிரி-தொழில்நுட்ப புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் உயிர் அறிவியல் துறையில் 150-க்கும் மேற்பட்ட உலகளாவிய திறன் மையங்கள் (GCCs) உள்ளன.
  • இந்த அறிக்கையானது உயிரி-தொழில்நுட்பத்தில் உலகளாவிய தலைமையாக உருவெடுக்கும் இந்தியாவின் திறனை எடுத்துரைப்பதோடு, 2047 ஆம் ஆண்டிற்குள் 1 டிரில்லியன் டாலர் உயிரி-பொருளாதாரத்தை எட்டுவதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்