உயிரித் தொழில்நுட்பத் தொழில்துறை ஆராய்ச்சி உதவிக் கழகமானது (BIRAC) சமீபத்தில் தனது “2022 ஆம் ஆண்டு இந்திய உயிரிப் பொருளாதார அறிக்கையினை” வெளியிட்டது.
இந்தியாவின் உயிரிப் பொருளாதாரம் ஆனது 2025 ஆம் ஆண்டில் 150 பில்லியன் அமெரிக்க டாலராகவும், 2030 ஆம் ஆண்டில் 300 பில்லியன் டாலருக்கும் அதிகமாகவும் உயரும் என எதிர்பார்க்கப் படுகிறது.
2021 ஆம் ஆண்டில், இந்தியாவின் உயிரிப் பொருளாதாரம் 80 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டி 14.1 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது.
இது 2020 ஆம் ஆண்டில் 70.2 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.
2021 ஆம் ஆண்டில் சராசரியாக ஒவ்வொரு நாளும் மூன்று உயிரித் தொழில்நுட்ப தொடக்க நிறுவனங்கள் நிறுவப்பட்டன.
இவ்வாறு, 2021 ஆம் ஆண்டில் மொத்தம் 1128 உயிரித் தொழில்நுட்பத் தொடக்க நிறுவனங்கள் நிறுவப் பட்டன.