TNPSC Thervupettagam

இந்திய எரிசக்தி தரவுக் கோப்பு

July 3 , 2025 10 hrs 0 min 21 0
  • மின்சார அமைச்சகமானது, 2025 ஆம் ஆண்டு ஜூலை 01 ஆம் தேதியன்று இந்திய எரிசக்தி தரவுக் கோப்பினை (IES) உருவாக்குவதற்காக வேண்டி ஒரு பணிக் குழுவைத் தொடங்கியது.
  • IES என்பது எரிசக்தித் துறைக்கு ஒரு மிகப் பாதுகாப்பான, ஒருங்கிணைந்த எண்ணிம அமைப்பாக இருக்கும்.
  • இது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாடு, மின் விநியோக திறன் மற்றும் நுகர்வோர் சேவைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த அமைப்பானது நுகர்வோர், எரிசக்தி கட்டமைப்புகள் மற்றும் பல்வேறு பரிவர்த்தனைகளுக்கான ஒரு தனித்துவமான அடையாளத்தினை உள்ளடக்கியதாக இருக்கும்.
  • இது பல்வேறு தளங்களில் நிகழ்நேர, ஒப்புதல் அடிப்படையிலான தரவுப் பகிர்வை அனுமதிக்கிறது.
  • இது மும்பை, குஜராத் மற்றும் டெல்லியில் உள்ள மின் விநியோக நிறுவனங்களுடன் (DISCOM) இணைந்து 12 மாத காலத்தில் சோதனைத் திட்டமாக செயல்படுத்தப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்