‘2023 ஆம் ஆண்டு இந்திய எரிசக்தி வாரம்’ ஆனது பிப்ரவரி 06 முதல் 08 ஆம் தேதி வரை பெங்களூரு நகரில் நடைபெற்றது.
இந்தியன் ஆயில் நிறுவனத்தின் ‘Unbottled’ என்ற ஒரு திட்டத்தின் கீழ் பிரதமர் சீருடை வழங்கீட்டினை தொடங்கி வைத்தார்.
இந்த சீருடைகள் மறுசுழற்சி செய்யப்பட்ட PET குடுவைகளால் தயாரிக்கப்படுகின்றன.
11 மாநிலங்கள்/ஒன்றியப் பிரதேசங்களில் உள்ள எண்ணெய்ச் சந்தைப்படுத்துதல் நிறுவனங்களின் 84 சில்லறை விற்பனை நிலையங்களில் எத்தனால் கலப்பு செயல் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட உள்ள E20 எரிபொருள் விநியோகத்தினையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.