எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழக நிறுவனமானது, இந்திய எரிவாயு பரிமாற்றச் சந்தையில் வீட்டு உபயோக எரிவாயுவை வர்த்தகம் செய்யும் இந்தியாவின் முதல் ஆய்வு மற்றும் உற்பத்தி நிறுவனமாக மாறியது.
ONGC என்பது அரசுக்குச் சொந்தமான எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு மற்றும் உற்பத்தி நிறுவனம் ஆகும்.
இது 1956 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டதோடு, இதன் தலைமையகம் புது டெல்லியில் உள்ளது.
இது இந்தியாவின் கச்சா எண்ணெயில் 70 சதவீதத்தினையும் அதன் இயற்கை எரிவாயுவில் 84 சதவீதத்தினையும் உற்பத்தி செய்கிறது.
இந்திய எரிவாயு பரிமாற்றச் சந்தை என்பது இந்தியாவின் முதல் தேசிய அளவிலான தானியங்கு எரிவாயு பரிமாற்றச் சந்தையாகும்.
இது கொள்முதல் செய்வோர் மற்றும் விற்பனையாளர் ஆகிய இரு தரப்பினரும் எரிவாயு வர்த்தகம் செய்வதற்கு ஏற்ற இடமாகும்.
இது பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியத்தின் ஒழுங்கு முறைக் கட்டமைப்பின் கீழ் செயல்படுகிறது.