TNPSC Thervupettagam

இந்திய கண்டெய்னர்/சரக்கு கொள்கலன் உற்பத்தி திட்டம்

August 14 , 2026 4 days 59 0
  • உள்நாட்டு கண்டெய்னர்/சரக்கு கொள்கலன் உற்பத்தியை அதிகரிக்கவும், இறக்குமதி சார்பைக் குறைக்கவும் ₹10,000 கோடி மதிப்பிலான கண்டெய்னர்/சரக்கு கொள்கலன் உற்பத்தி உதவித் திட்டத்தை (CMAS) அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.
  • இத்திட்டம் ஐந்து ஆண்டுகளுக்குச் செயல்படுத்தப்படும் என்பதுடன் மேலும் இது இந்தியாவின் வருடாந்திர கண்டெய்னர்/சரக்கு கொள்கலன் உற்பத்தித் திறனை சுமார் 7.5 லட்சம் இருபது-அடிக்கு சமமான அலகுகளாக (TEUs) உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது புதிய தொழிற்சாலைகள், தற்போதுள்ள அலகுகளின் விரிவாக்கம், சோதனை உள்கட்டமைப்பு, திறன் மேம்பாடு மற்றும் திறன் உருவாக்கம் ஆகியவற்றை ஆதரிக்கும்.
  • இந்தியா தற்போது உள்நாட்டுத் தேவைகள் மற்றும் மறுசீரமைப்புக்காக ஆண்டுக்கு சுமார் 2 மில்லியன் காலி கண்டெய்னர்/சரக்கு கொள்கலன்களை இறக்குமதி செய்கிறது.
  • இந்தத் திட்டத்தின் மூலம் கண்டெய்னர்/சரக்கு கொள்கலன் உற்பத்தி மற்றும் தொடர்புடைய தொழில்களில் சுமார் 3,000 நேரடி மற்றும் 50,000 மறைமுக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்