3வது இந்திய கலங்கரை விளக்க விழா விசாகப்பட்டினத்தில் தொடங்கப்பட்டது.
உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக வரலாற்று சிறப்புமிக்க கலங்கரை விளக்கங்களை சுற்றுலா மையங்களாக மேம்படுத்துவதே இந்த விழாவின் நோக்கம் ஆகும்.
ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் முதல் கலங்கரை விளக்க அருங்காட்சியகம் மற்றும் அசாமின் நதிக்கரைப் பகுதிகளில் நான்கு புதிய கலங்கரை விளக்கங்கள் ஆகியவை இந்தத் திட்டங்களில் அடங்கும்.
கலங்கரை விளக்கச் சுற்றுலா கடலோரச் சமூகங்களின் அதிகாரமளித்தல், கலாச்சார பாரம்பரியம் மற்றும் நிலையான சுற்றுலாவை ஆதரிக்கிறது.