9வது இந்திய கைபேசி மாநாடானது (IMC-2025) புது டெல்லியின் யஷோபூமியில் தொடங்கப் பட்டது.
இந்த நிகழ்வானது, ஆசியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு, ஊடகம் மற்றும் தொழில் நுட்பக் கூட்டமாகும்.
இது தொலைத்தொடர்புத் துறை மற்றும் இந்திய கைபேசி இணைப்புச் சேவை வழங்குநர் சங்கம் ஆகியவற்றினால் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வின் கருத்துரு, "Innovate to Transform" என்பதாகும்.
இந்த நிகழ்வானது 6G, குவாண்டம் தகவல் தொடர்பு, குறை கடத்திகள், ஒளியிழை சார்ந்த வலையமைப்புகள் மற்றும் இணையவெளி மோசடித் தடுப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.