5 நாட்களுக்கு நடைபெறும் 42-வது இந்திய சமூக அறிவியல் காங்கிரசானது ஒடிசாவின் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா தொழில்துறை தொழில்நுட்ப நிறுவன (Kalinga Institute of Industrial Technology-KIIT) வளாகத்தில் நடைபெற்றது.
இந்த கூடுகையின் கருத்துருவானது டிஜிட்டல் யுகத்தில் மனிதனின் எதிர்காலம் (Human Future in Digital Era) என்பதாகும்.
அடிமட்ட நிலையில் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆராய்ச்சியை ஊக்குவிப்பதே இதன் நோக்கமாகும்.
இந்த நிகழ்வானது KIIT மற்றும் இந்திய சமூக அறிவியல் அகாடமியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.