முதலாவது இந்திய சர்வதேசக் கூட்டுறவு வணிகக் கண்காட்சி (IICTF - India International Cooperatives Trade Fair) 2019 ஆம் ஆண்டு அக்டோபர் 11 முதல் அக்டோபர் 13 வரை புது தில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் நடைபெறவிருக்கின்றது.
இது விவசாயிகள், கலைஞர்கள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களின் இதர உறுப்பினர்களை சர்வதேச வணிகத் துறைக்கு எடுத்துச் செல்வதற்கான ஒரு தனித்துவ முன்னெடுப்பாகும்.
இந்த நிகழ்வு பின்வரும் அமைப்புகளால் ஒருங்கிணைக்கப்படுகின்றது.
ஆசியா மற்றும் பசிபிக்கில் உள்ள விவசாயக் கூட்டுறவுகளின் வளர்ச்சிக்கான அமைப்பின் ஆதரவுடன் தேசியக் கூட்டுறவு வளர்ச்சிக் கழகம் (NCDC - National Cooperative Development Corporation)
மூன்று அமைச்சகங்கள்
4 மாநில அரசுகள்
பல்வேறு உச்ச நிலையில் உள்ள இந்தியக் கூட்டுறவு அமைப்புகள்