இந்திய சினிமாவின் தேசிய அருங்காட்சியகத்தின் திரைப்படப் பிரிவானது ‘NMIC’ (National Museum of Indian Cinema) எனும் பதினைந்து நாட்களுக்கொரு முறை வெளிவரும் செய்தி அறிக்கையை வெளியிட்டுள்ளது.
நாட்டின் முதல் தேசியத் திரைப்பட அருங்காட்சியகமானது 2019 ஆம் ஆண்டு ஜனவரியில் தொடங்கப்பட்டது. இது மும்பையின் குல்ஷன் மஹாலில் அமைந்துள்ளது.
இது 100 ஆண்டுகளாகப் பரந்து விரிந்திருக்கும் இந்திய சினிமாவின் வளமான பாரம்பரியத்தைக் காட்டுகிறது.