மகாராஷ்டிராவின் மும்பையில் நாட்டின் முதலாவது இந்தியா சினிமாவிற்கான தேசிய அருங்காட்சியகத்தை (National Museum of Indian Cinema -NMIC) பிரதமர் திறந்து வைத்தார்.
இந்த அருங்காட்சியகமானது நூற்றாண்டு கால பழமையான இந்திய திரைப்படங்களின் பயணத்தை விளக்கமாக காட்ட முற்படுகின்றது.
இந்த NMIC ஆனது திரைப்பட இயக்குநர் ஷ்யாம் பெனகலின் தலைமையிலான அருங்காட்சியக ஆலோசனை குழுவின் வழி காட்டுதலின் கீழ் கட்டப்பட்டது.
கவிஞர் பிரசூன் ஜோஷி தலைமையிலான புத்தாக்கக் குழுவும் NMIC-ஐ மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது.