TNPSC Thervupettagam

இந்திய-தாய்லாந்து CORPAT

November 16 , 2021 1349 days 557 0
  • இந்தியக் கடற்படைக்கும் தாய்லாந்து நாட்டின் ராயல் கடற்படைக்கும் இடையே 32வது இந்திய -தாய்லாந்து ஒருங்கிணைந்த ரோந்துப் பயிற்சியானது  இந்தியப் பெருங்கடல் பகுதியில் நடத்தப்பட்டது.
  • இந்தியாவில்  உருவாக்கப்பட்ட ஏவுகணை எதிர்ப்புக் கப்பலான இந்தியக் கடற்படைக் கப்பல் (INS) கர்முக், மற்றும் கம்ரோசின் ரக நீர்மூழ்கி எதிர்ப்பு ரோந்துக் கப்பலான ஹச்.டி.எம்.எஸ், தாய்லாந்து நாட்டுக் கப்பல் (HTMS) தயோன்சன் ஆகியவை இரண்டு நாட்டின் கடற்படைகளின் கடல்சார் ரோந்து விமானங்களுடன்  இணைந்து CORPAT பயிற்சியில் பங்கேற்கின்றன.
  • CORPAT என்ற பயிற்சியானது இரு நாட்டின் கடற்படைகளுக்கு இடையே புரிதல் மற்றும் இயங்குந் தன்மையை உருவாக்குகிறது.
  • இது சட்டவிரோதமான முறையில் அறிவிக்கப்படாமல்  (IUU - Illegal Unreported Unregulated) மீன்பிடித்தல், போதைப்பொருள் கடத்தல், கடல்சார்  பயங்கரவாத நடவடிக்கைகள், ஆயுதமேந்திய கொள்ளை மற்றும் கடற்கொள்ளை போன்ற சட்ட விரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்கும் ஒடுக்குவதற்குமான நடவடிக்கைகளை நிறுவுவதற்கும் இது உதவுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்