TNPSC Thervupettagam

இந்திய திட்ட நேர விதிகள்

September 1 , 2026 12 days 102 0
  • நுகர்வோர் விவகாரங்கள் துறை, சட்ட அளவியல் (இந்திய திட்ட நேரம்) விதிகள், 2026ஐ அறிவித்துள்ளது இதன் மூலம் இந்தியாவின் சட்ட, நிர்வாக, வணிக மற்றும் அதிகாரப் பூர்வ நோக்கங்களுக்கான கட்டாய நேரக் குறிப்பானாக இந்திய திட்ட நேரம் (IST), அதாவது UTC+5:30 மாற்றப்பட்டுள்ளது.
  • புது தில்லியில் உள்ள CSIR-தேசிய இயற்பியல் ஆய்வகமானது (NPLI) அதிகாரப்பூர்வ ISTக்குப் பயன்படுத்தப்படும் தேசிய நேர அளவுகோலான UTC(NPLI)-ஐ பராமரிக்கிறது.
  • பிராந்தியக் குறிப்புத் தரநிலை ஆய்வகங்கள் மற்றும் NavIC (இந்திய விண்மீன் தொகுப்புடனான வழிசெலுத்தல்) மூலம் அதிகாரப்பூர்வ IST பரப்பப்படும்.
  • தொலைத்தொடர்பு, டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மற்றும் மின் தொகுப்பு அமைப்புகள் வலையமைப்பு நேர நெறிமுறை (NTP) மற்றும் துல்லிய நேர நெறிமுறை (PTP) ஆகியவற்றைப் பயன்படுத்தி IST உடன் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.
  • இந்த விதிகள் அரசிதழில் வெளியிடப்பட்ட 180 நாட்களுக்குப் பிறகு, சுமார் 2027 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடைமுறைக்கு வரும், மேலும் 2009 ஆம் ஆண்டு சட்ட அளவியல் சட்டத்தின் கீழ் விதிகளுக்கு இணங்கத் தவறினால் அபராதம் விதிக்கப் படும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்