February 10 , 2026
5 days
66
- சவுதி அரேபியாவை விஞ்சி, ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) 2025 ஆம் ஆண்டில் இந்திய திறன்சாரா தொழிலாளர்களுக்கான மிகப்பெரிய வெளிநாட்டு இடமாக மாறியது.
- 2025 ஆம் ஆண்டில், 200,686 இந்தியத் தொழிலாளர்கள் ஐக்கிய அரபு அமீரகத்திற்குப் புலம்பெயர்ந்த அதே சமயம் சவுதி அரேபியாவிற்கு 136,812 பேர் மட்டுமே சென்றனர்.
- 2024 ஆம் ஆண்டில் சவுதி அரேபியா 167,598 தொழிலாளர்களுடன் முன்னணியில் இருந்த முந்தைய நிலையை இது மாற்றியமைத்துள்ளது.
- ஒட்டு மொத்தமாக, 2025 ஆம் ஆண்டில் 449,110 இந்தியத் தொழிலாளர்கள் 11 முக்கிய தொழிலாளர்களை ஏற்கும் நாடுகளுக்குச் சென்றனர்.
- கத்தாரில் இந்தியத் தொழிலாளர்களின் எண்ணிக்கையில் சரிவு காணப்பட்ட நிலையில், ஓமனில் 2025-ஆம் ஆண்டில் 29,158 அளவில் நிலையான வளர்ச்சி பதிவாகி உள்ளது.
- ஐக்கிய அரபு அமீரகத்தின் வளர்ச்சிக்கு உள்கட்டமைப்புத் திட்டங்கள், அதிக ஊதியம், வரி இல்லாத வருமானம் மற்றும் தொழிலாளர்களுக்கு உகந்த கொள்கைகளே காரணமாகும்.

Post Views:
66