மேம்படுத்தப்பட்ட இந்திய நகர்ப்புற ஆய்வகம் மற்றும் காணொளிச் சுவரை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான அமைச்சகம் தொடங்கியுள்ளது.
இது மிகவும் சிக்கலான நகர்ப்புற சவால்களைக் களையும் தகவலின் திறன்மிகு பயன்பாட்டிற்கான தகவல் கலாச்சாரத்தை உருவாக்கக்கூடிய வகையில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட தகவல் திறன்மிகு நகரங்களுக்கான உத்திகளின் ஒரு முக்கியமான பகுதியாகும்.
நகர்ப்புற ஆய்வகங்களின் கருத்துருவானது 1997-ல் துருக்கியின் இஸ்தான்புல்லில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் வாழ்விடம் – II என்ற கருத்தரங்கில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது.