TNPSC Thervupettagam

இந்திய நகர்ப்புறப் போக்குவரத்து மாநாடு & கண்காட்சி - 2019

December 1 , 2019 2017 days 604 0
  • 2019 ஆம் ஆண்டின் இந்திய நகர்ப்புறப் போக்குவரத்து மாநாடு மற்றும் கண்காட்சியின் 12வது பதிப்பானது உத்தரப் பிரதேசத்தின் தலைநகரான லக்னோவில் நடைபெற்றது.
  • மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் உள்ள தொழில்முறை அமைப்பான நகர்ப்புறப் போக்குவரத்து நிறுவனம் இதை ஏற்பாடு செய்தது.
  • இம்மாநாட்டின் இந்த ஆண்டிற்கான கருப்பொருள் “அணுகக்கூடிய மற்றும் வாழக்கூடிய நகரங்கள்” என்பதாகும்.
  • இது மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் உதவியுடன் ஏற்பாடு செய்யப்படும் வருடாந்திர முதன்மை நிகழ்வாகும்.
  • 2006 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தின் தேசிய நகர்ப்புறப் போக்குவரத்துக் கொள்கையின் படி இது தோற்றுவிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்