பியூஷ் கோயல் அவர்கள் துபாய் நகரில் அமைக்கப்பட்டுள்ள இந்திய நகை கண்காட்சி மையக் கட்டிடத்தினைத் திறந்து வைத்தார்.
இதன் திறப்பு விழாவின் போது, வருடாந்திர ஏற்றுமதி இலக்கினைத் தற்போதுள்ள 35 பில்லியன் டாலர் மதிப்பிலிருந்து 100 பில்லியன் டாலர்களாக உயர்த்தும் வகையில் செயல்படுமாறு இரத்தினக்கற்கள் மற்றும் நகை ஏற்றுமதிச் சபையின் ஏற்றுமதி உறுப்பினர்களிடம் அமைச்சர் வலியுறுத்தினார்.