இந்த வரைபடமானது இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு மற்றும் இந்திய அரசின் ஆற்றல் அமைச்சகங்களுடன் இணைந்து நிதி ஆயோக் அமைப்பினால் உருவாக்கப் பட்டுள்ளது.
இந்தப் புவிசார் ஆற்றல் வரைபடமானது எண்ணெய் மற்றும் எரிவாயுக் கிணறுகள், பெட்ரோலியச் சுத்திகரிப்பு நிலையங்கள், மரபுசார் எரிசக்தி ஆலைகள், நிலக்கரித் தளங்கள் மற்றும் நிலக்கரி அமைவிடங்கள் போன்ற ஆற்றல் வளங்களின் முழுமையான தகவலை வழங்குகிறது.
ஆற்றல் வளங்களின் புவிசார் தகவல் அமைப்பு வரைபடமானது இந்தியாவின் ஆற்றல் துறையில் நிகழ்நேர மற்றும் ஒருங்கிணைந்தத் திட்டமிடலை உறுதி செய்வதில் உதவியாக இருக்கும்.