இந்திய நாட்டிற்கான எண்ணெய் வழங்கீட்டில் முன்னணியில் உள்ள நாடு
December 19 , 2022 1030 days 491 0
முதன்முறையாக ஈராக் நாட்டினை விஞ்சி, இந்தியாவிற்கு அதிகளவில் எண்ணெய் வழங்கும் முன்னணி நாடாக ரஷ்யா உருவெடுத்துள்ளது.
ரஷ்யாவிலிருந்து இந்தியாவிற்கு மேற்கொள்ளப்படும் எண்ணெய் இறக்குமதியானது தொடர்ந்து ஐந்தாவது மாதமாக உயர்ந்துள்ளது.
இந்தியாவின் ஒட்டு மொத்த எண்ணெய் இறக்குமதியில் சுமார் 23 சதவிகிதம் ரஷ்யாவிலிருந்து மேற்கொள்ளப் படுகிறது.
கடந்த மாதம் ஈராக்கில் இருந்து இந்தியாவிற்கு மேற்கொள்ளப்படும் எண்ணெய் இறக்குமதியானது 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாத அளவிற்குப் பிறகு பதிவான மிகக் குறைந்த அளவாக குறைந்துள்ளது.