இந்திய நிதி அமைப்பின் நிலைத்தன்மை குறித்த மதிப்பீடு 2025
March 12 , 2025 181 days 242 0
“இந்திய நிதி அமைப்பின் நிலைத் தன்மை மதிப்பீடு” என்ற தலைப்பிலான இந்த ஒரு அறிக்கையானது சர்வதேச நாணய நிதியத்தால் வெளியிடப் பட்டுள்ளது.
மின்சாரத் துறை கடன்களில் சுமார் 63% ஆனது, 2024 ஆம் நிதியாண்டில் ஒரு வகை NBFC நிறுவனங்களாக இருந்த மூன்று பெரிய உள்கட்டமைப்பு நிதி நிறுவனங்களில் இருந்து மட்டுமே பெறப்பட்டவை என்று கண்டறியப்பட்டுள்ளது.
இது 2019-20 ஆம் ஆண்டில் 55% ஆக இருந்தது.
மேலும், அவற்றின் கடன்களில் சுமார் 56% ஆனது, சந்தை சார் செயற்கருவிகள் மூலம் நிதியளிக்கப் பட்டது என்ற நிலையில் மீதமுள்ளவை மட்டுமே வங்கி கடன்கள் மூலம் நிதியளிக்கப் பட்டு ள்ளன.
பொதுத்துறை வங்கிகள் (PSB) சுமார் 9% மட்டுமே மூலதன நிறைவு விகிதத்தை (CAR) பேணுவதில் சிரமங்களை சந்திக்க நேரிடுகின்றது.
CAR என்பது இடர் உண்டாகும் சொத்துகள் மீதான மூலதன விகிதமாகும் என்பதோடு இது வங்கியின் இழப்பு ஏற்புத் திறனை அளவிட பயன்படுகிறது.
இந்திய ரிசர்வ் வங்கியானது, PSB மற்றும் பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகளுக்கு என முறையே 12% மற்றும் 9% CAR விகிதத்தினைக் கட்டாயமாக்குகிறது.