வெளியுறவுத் துறை விவகாரங்கள் அமைச்சகமானது தனது முந்தைய மூன்று பிரிவுகளை ஒன்றிணைப்பதன் மூலம் இந்திய பசிபிக் பிரிவு ஒன்றை உருவாக்கியிருக்கின்றது.
Division
Focus
Quad Division
India’s joint maritime strategy with Australia, Japan and the US
ASEAN
Issues concerning the 10 Member countries of South-East Asian grouping
IORA (Indian Ocean Rim Association)
2 dozen odd Indian Ocean Littoral countries with the marked exception of Pakistan and China.
2018 ஆம் ஆண்டில் ஷாங்ரி லா கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடியால் எடுத்துரைக்கப்பட்ட இந்தியப் பசிபிக் கொள்கையோடு இது ஒத்துப் போகின்றது.
இந்தியா ஹார்மஸ் நீரிணையிலிருந்து மலாக்கா நீரிணைப் பகுதி வரை உள்ள கடல்சார் வளைவுப் பகுதியை தனது செல்வாக்கு நிறைந்த பகுதியாகக் கருதுகின்றது.
இந்த நடவடிக்கையின் மூலம் இந்தியா தனது செல்வாக்கை மேற்குப் பசிபிக் பிராந்தியத்திற்கு நீட்டிக்க எண்ணுகின்றது.
சமீபத்தில் அமெரிக்காவும் தனது பசிபிக் படைப் பிரிவுப் பகுதியை இந்திய பசிபிக் படைப்பிரிவு என்று மறுபெயரிட்டு இருக்கின்றது. இது தனது இந்திய-பசிபிக் கொள்கைக்கு வலிமை கொடுத்திட எண்ணுகின்றது.