இந்திய பல்கலைக் கழக சங்கத்தின் தலைவர் (Association of Indian Universities - AIU)
July 13 , 2018 2650 days 939 0
SRM அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் துணை வேந்தர் டாக்டர். சந்தீப் சஞ்சேட்டி டெல்லியிலுள்ள இந்திய பல்கலைக்கழக சங்கத்தின் (AIU) தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்திய பல்கலைக் கழக சங்கம், 1925ல் உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில் இது இந்திய பல்கலைக்கழகங்களுக்கிடையேயான கழகமாக அறியப்பட்டது.
துணைவேந்தர் சார்பில் தற்பொழுது 720 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை AIU கொண்டுள்ளது. மேலும் AIU இந்தியாவில் உள்ள எல்லா பல்கலைக்கழகங்களின் பிரதிநிதியாகவும் காணப்படுகிறது.
AIU பல்கலைக் கழகங்களுக்கிடையே ஒத்துழைப்பு மற்றும் ஒன்றுக்கொன்று ஒத்த கலந்தாய்வினை எளிதாக்குகிறது. அதே போல் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பாளராகவும் இது செயலாற்றுகிறது.