TNPSC Thervupettagam

இந்திய-பூட்டான் நாடுகளுக்கு இடையே உள்ள வர்த்தக உறவுகள்

August 1 , 2017 2481 days 936 0
  • இந்திய-பூட்டான் நாடுகளுக்கு இடையே உள்ள வர்த்தக உறவுகளை பலப்படுத்தும் வகையில் ஜூலை 29 முதல் புதிய உடன்படிக்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையான தொழில், வர்த்தகம் மற்றும் போக்குவரத்து ஆகிய துறைகள் குறித்த சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (Free Trade Agreements - FTA) ஆகும்.
  • இந்த உடன்படிக்கையானது பூட்டான் நாட்டின் பொருட்களை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பொழுது , இந்திய நாடு வழியாக சுங்க வரி செலுத்தாமல் கடந்து செல்ல வழிவகை செய்கிறது.
  • இந்தியா மற்றும் பூட்டான் இடையேயான இருதரப்பு வர்த்தக உறவுகள் இந்த ஒப்பந்தத்தால் நிர்வகிக்கப்படுகின்றன. இந்த ஒப்பந்தம் கடந்த ஜூலை 29, 2016 அன்று பத்து வருட காலத்திற்கு புதுப்பிக்கப்பட்டது. இதன் செல்லுபடிக்காலம் ஒரு வருடம் அல்லது புதிய உடன்படிக்கை அமலுக்கு வரும் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • இந்திய – பூட்டான் ஆகிய நாடுகளின் இருதரப்பு வர்த்தகம் 2016-17 ஆம் நிதி ஆண்டில் 7.43 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்