இந்திய பொதுக்கடன் பதிவேட்டிற்கான தனி நிபுணர்குழு (Public Credit Registry - PCR) – ரிசர்வ் வங்கி
October 25 , 2017 2832 days 1146 0
கடன் தகவலமைப்பு முறையை உருவாக்குதலுக்காக ரிசர்வ் வங்கி பொதுக்கடன் பதிவேட்டிற்கான ஒரு உயர்மட்ட நிபுணர் குழுவை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பதிவேடு அனைத்து பங்குதாரர்களும் எளிதில் அணுகும் வகையில் ஒரு பரந்த வங்கி கடன்களுக்கான மத்திய தகவல் மையமாக இருக்கும்.
வங்கிகளின் கடன் அபாயங்கள் பற்றிய மதிப்பீட்டினை மேம்படுத்தவும், வாராக்கடன்களை முன்கூட்டியே கணிக்கவும், கடன்களை மீட்கவும் உதவிடும் வகையில் இப்பதிவேடு அனைத்து வித கடன்களின் தரவுகளையும் பதிவு செய்யும்.
ஆரம்பத்தில் இப்பதிவேடு வங்கி வாடிக்கையாளர்களுக்கு உதவிடும். பின்னாளில் இந்த சேவை மற்ற வங்கி சாரா நிதிநிறுவனங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.
மத்திய வங்கியைப் போல இது ஒரு அரசு நிறுவனமாக நடத்தப்படும்.