இந்திய மக்கள்தொகை ஆய்வுச் சங்கத்தின் (IASP) படி, இந்தியாவின் மக்கள் தொகை 2080 ஆம் ஆண்டிற்குள் சுமார் 1.8 முதல் 1.9 பில்லியனாக நிலை பெறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
2000 ஆம் ஆண்டில் 3.5 ஆக இருந்த மொத்தக் கருவுறுதல் விகிதம் (TFR) ஆனது 2025 ஆம் ஆண்டில் 1.9 ஆகக் குறைந்துள்ளது என்ற நிலையில்இது 2.1 என்ற மாற்றீடு அளவை விடக் குறைவாக உள்ளது.
அதிக மேம்பாடு, சிறந்த கல்வி மற்றும் அதிகரித்தப் பெண் கல்வியறிவு ஆகியவை கருவுறுதல் விகிதத்தைக் குறைக்க உதவியுள்ளன.
கேரளா மற்றும் மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் முறையே சுமார் 1.5 மற்றும் 1.3 என்ற TFR உடன் தற்போது மிகக் குறைந்த கருவுறுதல் நிலைகள் உள்ளன.
ஆயுட்காலம் அதிகரித்து வருவதால், அதிக கவனிப்பு தேவைப்படும் முதியோர் மக்கள் தொகையானது இதனால் உருவாகிறது.