இந்திய மருத்துவ ஆணையம் (திருத்த) மசோதா, 2019 ஆனது நாடாளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
இது இந்திய மருத்துவ ஆணையச் சட்டம், 1956ஐ மாற்றுகின்றது.
இந்த மசோதாவானது தேசிய மருத்துவ ஆணையத்தை (National Medical Commission - NMC) அமைக்க வழி செய்கின்றது. இந்த ஆணையமானது இந்திய மருத்துவக் கழகத்தை (Medical Council of India - MCI) மாற்றவிருக்கின்றது.
இது மத்திய அரசினால் நியமிக்கப்பட்ட 25 உறுப்பினர்களைக் கொண்டிருக்கும்.
இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட மூன்று ஆண்டு காலத்திற்குள், மாநில அளவில் மாநில அரசுகள் மாநில மருத்துவ ஆணையங்களை அமைக்க வேண்டும்.
மத்திய அரசு ஒரு மருத்துவ ஆலோசக ஆணையத்தை (Medical Advisory Council - MAC) அமைக்கும்.
மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள், தங்களது சிந்தனைகளை MAC மூலமாக NMCயின் முன் வைக்க முடியும்.
MAC ஆனது மருத்துவக் கல்வியின் “குறைந்தபட்சதரங்களை” தீர்மானிப்பது மற்றும் பராமரிப்பது குறித்த ஆலோசனைகளை NMCவிற்கு வழங்கும்.
மருத்துவப் பணியை மேற்கொள்வதற்கு நவீன மருத்துவத் தொழிலுடன் தொடர்புடைய சில இடைநிலைப் பயிற்சியாளர்களுக்கு ஒரு வரையறுக்கப்பட்ட உரிமத்தை NMC வழங்கும்.
இந்த மசோதாவின் கீழ் ஒழுங்குபடுத்தப்பட்ட அனைத்து மருத்துவ நிறுவனங்களிலும் இளநிலை மற்றும் முதுநிலை பல்நோக்கு மருத்துவக் கல்விக்கான சேர்க்கைக்கு ஒரே மாதிரியான தேசியத் தகுதி நுழைவுத் தேர்வு ஒன்று இருக்கும்.
மருத்துவராக பணியாற்றுவதற்கான உரிமத்தைப் பெறுவதற்காக மருத்துவ நிறுவனங்களிலிருந்துப் பட்டம் பெற்று வெளியேறும் மாணவர்களுக்கு நெக்ஸ்ட் தேர்வு (தேசிய எக்ஸிட் தேர்வு) என்ற பொது இறுதி ஆண்டு இளநிலைத் தேர்வு ஒன்று இருக்கும்.
இந்த மசோதாவின்படி இந்தத் தேர்வின் மதிப்பெண் ஆனது மருத்துவ நிறுவனங்களில் மாணவர்கள் முதுநிலைப் படிப்புகளில் சேருவதற்கு அடிப்படையாக இருக்கும்.