இந்திய மருந்தியல் புத்தகம் 2026 – இரத்தத் தர நிலைகள்
June 27 , 2026 34 days 112 0
இந்திய மருந்தியல் புத்தகம் (IP) 2026 ஆனது, இரத்தம் மற்றும் இரத்தக் கூறுகளுக்கான உலகின் முதலாவது பிரத்யேக தரநிலைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்திய மருந்தியல் புத்தகத்தின் 10வது பதிப்பு 2026 ஆம் ஆண்டு ஜனவரி 2 அன்று புதுடெல்லியில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா அவர்களால் வெளியிடப்பட்டது.
இரத்தத்தின் தரம் மற்றும் பாதுகாப்பை ஒழுங்குபடுத்துவதற்காக இது 20 புதிய தனி வரைவுகளையும் மற்றும் 2 திருத்தப்பட்ட தனிவரைவுகளையும் உள்ளடக்கியுள்ளது.
இந்தத் தரநிலைகள் இரத்தமாற்றுச் சேவைகளில் பயன்படுத்தப்படும் மருந்துகள் மற்றும் இரத்தப் பொருட்களின் அடையாளம், தூய்மை, வீரியம் மற்றும் தரம் ஆகியவற்றை வரையறுக்கின்றன.
சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய மருந்தியல் ஆணைக் குழு இந்தத் தரநிலைகளை உருவாக்கி மேம்படுத்துகிறது.
சுகாதார அமைப்புகளில் இரத்தப் பாதுகாப்பை மேம்படுத்துவதும், இரத்தமாற்றத்தின் மூலம் பரவும் தொற்றுகளைக் குறைப்பதும் இதன் நோக்கமாகும்.