இது இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் மற்றும் இந்தியப் பொதுச் சுகாதார கூட்டமைப்பு ஆகியவற்றினால் இணைந்து தொடங்கப்பட்டுள்ளது.
இந்த முன்னெடுப்பானது குழந்தைகள் வளர்ச்சி மற்றும் குழந்தைகள் இறப்பு குறித்த மாவட்ட அளவிலான போக்குகள் மீதான தனது அறிக்கையை வழங்கி உள்ளது.
2000 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் குழந்தை இறப்பு விகிதமானது 49% என்ற அளவில் குறைந்துள்ளது.
குழந்தைகள் இறப்பு மற்றும் குழந்தை வளர்ச்சி ஆகியவை மேம்பட்டிருந்தாலும் இந்தியாவில் மாவட்டங்களுக்கிடையேயான பாகுபாடானது அதிகமாக உள்ளது.
இந்த அறிக்கையின்படி 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இறப்பிற்கான முக்கியமான காரணங்கள் வயிற்றோட்ட நோய்கள், குறைப்பிரசவம், சுவாசத் தொற்றுப் பிரச்சினைகள், பிறப்பின் போதான குழந்தைகளின் குறைந்த எடை, பிறப்பின் போது குழந்தைகளுக்கு ஏற்படும் மூச்சுத் திணறல் ஆகியனவாகும்.