இந்திய மின்சார வாகனப் போக்குவரத்துக் குறியீடு 2025
September 18 , 2026 22 days 129 0
நிதி ஆயோக் அமைப்பானது இந்திய மின்சார வாகன போக்குவரத்துக்குறியீட்டை (IEMI) 2025-ஐ வெளியிட்டது, இதில் மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் டெல்லி சிறந்த செயல்திறன் கொண்டதாக முதலிடம் பிடித்துள்ளது.
இந்த இரண்டாவது பதிப்பு மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்கள் முழுவதும் மின்சார வாகன போக்குவரத்து இலக்குகளை நோக்கிய முன்னேற்றத்தை அளவிடுகிறது.
டெல்லியைத் தொடர்ந்து மகாராஷ்டிரா, கர்நாடகா, சண்டிகர் மற்றும் கோவா ஆகியவை சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலங்களாகப் பின்தொடர்கின்றன.
போக்குவரத்து மின்மயமாக்கல், மின்னேற்ற உள்கட்டமைப்பு மற்றும் மின்சார வாகன (EV) ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு ஆகிய மூன்று கருத்துருக்களின் கீழ் 16 குறிகாட்டிகளைப் பயன்படுத்தி IEMI மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களுக்கு 100 க்கு மதிப்பெண்களை வழங்குகிறது.
அதிகபட்ச மதிப்பெண் 2024 ஆம் ஆண்டில் 77 ஆக இருந்ததிலிருந்து 2025 ஆம் ஆண்டில் 84 ஆக மேம்பட்டுள்ளது.