சீனாவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய மீன் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா உள்ளது.
உலகளாவிய மீன் உற்பத்தியில் இந்தியா சுமார் 8% பங்கைக் கொண்டுள்ளது.
இந்தியாவின் நதிசார்/உள்நாட்டு மீன் உற்பத்தி மொத்த மீன் உற்பத்தியில் சுமார் 75% ஆகும்.
நதிசார்/உள்நாட்டு மீன்வளத் துறையானது நாட்டில் பெரும்பாலும் மாநில அரசுகளின் பொறுப்பில் உள்ளது.
கடல் சார் மீன் வளத் துறை ஆனது மத்திய மற்றும் கடலோர மாநில அரசுகளுக்கு இடையே பகிரப்பட்டப் பொறுப்பாக உள்ளது.
மீன்வளம் ஆனது தேசிய மொத்த மதிப்புக் கூட்டலில் (GVA) சுமார் 1.12 சதவீதமாகும்.
மேலும் இது வேளாண்மையின் மொத்த மதிப்புக் கூட்டலில் 7.26 சதவீதத்தைக் கொண்டுள்ளது.
இந்தியாவின் கடல் சார் மீன் பிடிப்பு 2024 ஆம் ஆண்டில் இரண்டு சதவீதம் குறைந்து 3.47 மில்லியன் டன்களாக இருந்தது.
இது கொச்சியில் உள்ள மத்திய கடல்சார் மீன் வள ஆராய்ச்சி நிறுவனத்தினால் (CMFRI) வழங்கப்பட்ட தகவல் ஆகும்.
குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டு 754,000 டன்கள் என்ற அளவில் அதிக அளவு மீன் பிடிப்பு பதிவாகியுள்ளது.
அதைத் தொடர்ந்து முறையே தமிழ்நாடு 679,000 டன்களுடன் மற்றும் கேரளா 610,000 டன்களுடன் இடம்பெற்றுள்ளன.
இந்திய கானாங்கெளுத்தி இனமானது, இந்த மீன் பிடிப்புப் பட்டியலில் சுமார் 263,000 டன்களுடன் முதலிடத்திலும், எண்ணெய் மத்தி மீன் பிடிப்பு சுமார் 241,000 டன்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது.
மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரப் பிரதேசம் தவிர, மேற்கு கடற்கரைப் பகுதியில் ஒட்டு மொத்தமாக மீன் பிடிப்பு குறைந்தாலும், கிழக்கு கடற்கரையில் அது அதிகரித்து வரும் போக்கு காணப்பட்டது.
முந்தைய ஆண்டை விட மகாராஷ்டிராவில் 47 சதவீத வளர்ச்சிப் பதிவாகியுள்ளது.
மேற்கு வங்காளம், தமிழ்நாடு மற்றும் ஒடிசா ஆகியன முறையே 35 சதவீதம், 20 சதவீதம் மற்றும் 18 சதவீதம் என்ற அளவுகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் கண்டன.
டானா, ஃபெங்கல், ரெமால் மற்றும் அஸ்னா போன்ற புயல்கள் பெருமளவில் மீன்பிடி நடவடிக்கைகளைக் கணிசமாகப் பாதித்தன.
ஆந்திரப் பிரதேசம் மற்றும் கேரளாவில் அதிகரித்த வெப்ப அலை நாட்கள் மீன்பிடி நடவடிக்கைகளை மேலும் பாதித்தன.
இந்தியாவில் கடல் சார் மீன் உற்பத்தி செய்யும் மிகப்பெரிய மாநிலமாக ஆந்திரப் பிரதேசம் உள்ளது.
நாட்டில் கடல் சார் மீன் உற்பத்தி செய்யும் இரண்டாவது பெரிய மாநிலமாக குஜராத் உள்ளது.
இந்தியாவில் மிகப்பெரிய அளவில் நதிசார் மீன் உற்பத்தி செய்யும் மாநிலமாகவும் ஆந்திரப் பிரதேசம் உள்ளது.