நிதியியல் சட்டம், 2019 எனும் சட்டத்தின் மூலம் இந்திய முத்திரைத்தாள் சட்டம், 1899 என்ற சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இந்திய அளவிலான ஒரு சீரான பங்குச் சந்தையைக் கட்டமைப்பதற்காக, ஒன்றுபட்ட கட்டணத்துடன் முத்திரைத் தாள் வரியின் மையப்படுத்தப்பட்ட முறையானது இந்தத் திருத்தத்தின் மூலம் கொண்டு வரப்பட்டுள்ளது.
அனைத்து மாநிலங்களிலும் ஒரே மாதிரியான முத்திரைத்தாள் வரியானது அனைத்து நிதியியல் பங்குப் பரிவர்த்தனைகளின் போது விதிக்கப்பட இருக்கின்றது.
சட்டப்பூர்வ மற்றும் நிறுவனம்சார் செயல்முறையின்படி, முத்திரைத்தாள் வரியானது மாநில அரசினால் வசூலிக்கப் படுகின்றது.
ஒரே சீரான வரியின் கீழ், மத்திய அரசானது வர்த்தகம் நடைபெற்ற இடத்தின் அடிப்படையிலிருந்து மாநில அரசிற்கு இந்தத் தொகையைச் செலுத்த இருக்கின்றது.